சினிமா

ஆத்தாடி.. இப்படி ஒரு பட டைட்டிலா.? அட்டகத்தி தினேஷின் அட்டகாச டைட்டில்.!

Summary:

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினே

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இப்படத்தில் நடித்ததற்கு பிறகு அவர் அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்பட்டார். இப்படத்தை தொடர்ந்து தினேஷ் குக்கூ, விசாரணை, கபாலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

ஆனாலும் அட்டகத்தி மற்றும் விசாரணை அளவுக்கு எந்த படமும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இப்போது அவரே இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்க உள்ள படத்திற்கு வித்தியாசமாக வயிறுடா என பெயர் வைத்துள்ளார். இப்படத்தை அவரே நடித்தும் இயக்கவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அட்டக்கத்தி தினேஷ் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போஸ்டரை பதிவிட்டுள்ளார். வித்தியாசமான தலைப்பில் படம் உள்ளதால் இந்த படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Advertisement