சேலத்தில் நடந்த ஜாதிய விவகாரத்தை விசிக கண்டுகொள்ளாதது ஏன்?.. நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு..!
ஆசிரியர் தினமான இன்று தனது குருவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரமாண்ட இயக்குனர்!!!
ஆசிரியர் தினமான இன்று தனது குருவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரமாண்ட இயக்குனர்!!!

ஆசிரியர் தினமான இன்று தனது குருவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரமாண்ட இயக்குனர். அட்லீ தனது இளம் வயதில் பல திரைப்படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர்களில் சிறந்தவர் ஆவார்.
அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி.
இவர் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவிய இயக்குனர் ஷங்கர் சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
While Teachers' Day comes just once a year, your teachings help me daily. I am and will always be eternally grateful to you. Happy Teachers' Day! @shankarshanmugh sir pic.twitter.com/oq56mGloFF
— atlee (@Atlee_dir) September 5, 2018