சினிமா

ஷாப்பிங் மார்க்கெட்டில் ஜம்முனு போஸ் கொடுத்த அட்லீ ப்ரியா! வைரல் புகைப்படம்...

Summary:

இயக்குனர் அட்லீ ப்ரியாவின் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அட்லீ ப்ரியாவின் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்தன் மூலம் இன்று பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார் இயக்குனர் அட்லீ.  முதலில் ராஜா - ராணி திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற  நிலையில் ரசிகர்களின் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பின்னர் ராஜா - ராணி படத்தை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல்,பிகில் என   மாபெரும் வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் இயக்குனர் அட்லீ.   இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் அட்லீ அவர்கள் பாலிவுட் செல்ல இருப்பதாக தகவல் வெளியாயின.

பின்னர் தனது தோழியும் காதலியும் ஆன ப்ரியாவை திருமணம் செய்து திருமண வாழ்வை மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் அட்லீயும் ப்ரியாவும் ஷாப்பிங் சென்று கலைத்துபோய் உட்கார்ந்தப்படி போஸ்  ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement