சினிமா

ஜொலிக்கும் புடவையில் தேவதைபோல் மின்னும் அழகி அதுல்யா ரவியின் புகைப்படம் இதோ!

Summary:

தமிழகத்தை சேர்ந்த அழகு தேவதை அதுல்யா  ரவியின் குயூட் போட்டோஷூட் இணையத்தளத்தில் வைரலாக

தமிழகத்தை சேர்ந்த அழகு தேவதை அதுல்யா  ரவியின் குயூட் போட்டோஷூட் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆன இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். காதல் கண்கட்டுதே படத்தை அடுத்து சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சிறு சிறு குறும்படங்கள் மூலம் இணையத்தை கலக்கிவந்த இவர் இன்று வெள்ளித்திரையில் வளர்ந்துவரும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

சினிமா ஒருபுறம் இருந்தாலும், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஜொலிக்கும் புடவையில் தேவதைப்போல் அழகிய சிரிப்புடன் அவரது செல்லகுட்டியை தூக்கிவைத்தபடி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையவாசிகளின்  கவனத்தை ஈர்த்து  வருகிறது.


Advertisement