கீர்த்தி சுரேஷின் நாய் என்ன காரியம் செய்து பாருங்க ! அவரே வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரல்...
மார்க் ஆண்டனி பட இயக்குனருடன் இணையும் அஜித்.. வெளியான அசத்தல் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் இந்த திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில், வெற்றிமாறன், சுதா கொங்காரா, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய மூவரில் ஒருவர் தான் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை சென்னையில் மிகவும் எளிமையாக நடைபெற்றதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.