சினிமா

பிறந்த நாளில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஜோடியை சந்தித்துள்ள இசைபுயலின் மகன்! தீயாய் பரவும் கலக்கல் புகைப்படம்!!

Summary:

பிறந்த நாளில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஜோடியை சந்தித்துள்ள இசைபுயலின் மகன்! தீயாய் பரவும் கலக்கல் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டி பறக்கும் அவர் ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார்.

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு. இந்த தம்பதியினருக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானுக்கும், அவரது மகன் அமீனுக்கும் ஜனவரி 6 ஒரே நாளில் பிறந்த நாள். இந்தநிலையில் அண்மையில் இருவரும் தங்களது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

 

அந்த நாளில் ஏ.ஆர்.ஆர். அமீன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்துள்ளார். அவர்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அமீனுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 


Advertisement