கணவருடன் விவாகரத்து முடிவு.! மகள் சாரா செய்த காரியம்!! கண்ணீருடன் பகிர்ந்த விஜே அர்ச்சனா!!

கணவருடன் விவாகரத்து முடிவு.! மகள் சாரா செய்த காரியம்!! கண்ணீருடன் பகிர்ந்த விஜே அர்ச்சனா!!


archana-shares-about-her-problem-with-husband

முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக வலம் வருபவர் அர்ச்சனா. இவர் சன் டிவி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். பின்னர் சில காலங்கள் தனது பணிக்கு இடைவெளி விட்டிருந்த அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விமர்சனங்களை சந்தித்து மக்களிடையே பெருமளவில் ரீச்சான அர்ச்சனா தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவி பல பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 16 வயதில் சாரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அர்ச்சனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு, விவகாரத்து வரை சென்றது குறித்து கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

Archana

அவர் கூறுகையில், நானும் என் கணவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை வரும். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்தோம். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு என் கணவருக்கு விசாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்பர் கிடைத்தது.

அப்பொழுது தான் எனது மகள் சாரா எங்களை அமர வைத்து, எங்களுக்குள் இருக்கும் காதலை, இருவராலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியாது என்பதை புரிய வைத்தாள். 15 நாட்களாக நாங்கள்  20 வருடத்திற்கு முன்பு எப்படி காதலர்களாக இருந்தோமோ அவ்வாறு உள்ளோம் என கூறியுள்ளார்.