அறுவை சிகிச்சை முடிஞ்சாச்சு! விஜே அர்ச்சனாவின் தற்போதைய நிலை! மகள் சாரா வெளியிட்ட தகவல்!!

அறுவை சிகிச்சை முடிஞ்சாச்சு! விஜே அர்ச்சனாவின் தற்போதைய நிலை! மகள் சாரா வெளியிட்ட தகவல்!!


archana health condition after surgery

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனால் அவர் சில விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.

மேலும் அர்ச்சனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்தநிலையில் அர்ச்சனா அண்மையில், தனது மூளையின் அருகே சிறு கட்டி இருப்பதாகவும், அதனால் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் குணமடைந்துவர பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.

Archanaஇந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் உடல்நலம் குறித்து அவரது மகள் சாரா தகவல் வெளியிட்டுள்ளார். அவர் எனது அம்மாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. இன்னும் கண் விழிக்கவில்லை, மயக்க நிலையிலேயே உள்ளார். ஒரு வார காலம் சிகிச்சை எடுத்த பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.