இதெல்லாம் நியாயமே இல்லை..15 வயதில் சாராவுக்கு இப்படியொரு கஷ்டமா.! மகளுடன் கண்கலங்கும் அர்ச்சனா!!

இதெல்லாம் நியாயமே இல்லை..15 வயதில் சாராவுக்கு இப்படியொரு கஷ்டமா.! மகளுடன் கண்கலங்கும் அர்ச்சனா!!


archana-daughter-zara-have-no-friends

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியின் மூலம் ஆங்கராக களமிறங்கிய அவர் பின் பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். திருமணத்திற்குப் பின் சில காலம் இடைவெளி விட்டிருந்த அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பின் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே ரீச்சானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ஹேட்டர்ஸ்களும் உருவாகினர். அதனை தொடர்ந்து அர்ச்சனா விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சாராவும் சமூக வலைதளங்களில் ஆகட்டிவாக இருக்கக்கூடியவர். சிறுவயதிலேயே மிகவும் பக்குவமாக இருக்கிறார்.

இந்நிலையில் அர்ச்சனா அண்மையில் தனது மகளுடன் இணைந்து பேட்டி கொடுத்துள்ளார். அப்பொழுது சாரா, நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு நண்பர்களே கிடையாது. என்னை விட்டு விலகிவிட்டனர். என் அம்மாதான் எனக்கு பெஸ்ட் பிரெண்ட் எனக் கூறி கண்கலங்கியுள்ளார். உடனே அர்ச்சனாவும் 15 வயதில் மீடியாவில் இருப்பதால் நண்பர்களே கிடையாது என்பது நியாயமே கிடையாது. ரொம்ப கஷ்டம். எப்பொழுதும் என்னிடம் வந்து அழுவாள், நான் அவளுக்கு சிறந்த நண்பராக இருப்பேன் என கலங்கியபடி பேசியுள்ளார்.