
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் விஜய் டிவிக்கு தாவியவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் ஏராளமான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளார். அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
அர்ச்சனாவின் மகள் சாரா. சிறுவயதிலே பக்குவமான குணத்தை கொண்ட அவர் சமூகவலைத்தளங்களில் எப்பொழுது ஆக்டிவாக இருக்க கூடியவர். மேலும் யூடியூபிலும் செம பிஸியாக ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட பாத்ரூம் டூர் என அவர்கள் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது. அர்ச்சனா மட்டுமின்றி அவரது மகள் சாராவையும் நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்தனர்.
இந்நிலையில் சாராவின் சமூக வலைதளப் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர், இந்த வயதிலேயே ஏன் இவ்வளவு attitude என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், என்னை பார்க்காமல், என்னிடம் பேசாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தால் நான் என்ன சொல்வது என தெரியவில்லை. பத்திரமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொருவர் நீங்க சீன் போடுறீங்க என்று சொல்கிறார்களே உண்மையா? என கேட்க, சாரா என்னால முடியல சார் விட்ருங்க என பதிலளித்துள்ளார்.
Advertisement
Advertisement