உன் வயசுக்கு இது ரொம்ப ஓவர்!! மோசமாக விமர்சித்த நெட்டிசனுக்கு நெத்தியடி பதிலளித்த அர்ச்சனாவின் மகள்!!archana-daughter-answered-to-who-badly-comment-her-vide

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் நடிகர் ஆரி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியாளர் ஆனார். மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ 3வது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தொகுப்பாளினி அர்ச்சனா.  இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் மிகுந்த அன்போடு பழகி வந்தார். மேலும் தனக்கென ஒரு குரூப் அமைத்துக்கொண்டு, அவர்களை வழிநடத்தி சொந்தமாக விளையாட விடாமல் தடுத்து வந்தார் எனவும் பலரும் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராக அத்துமீறி விமர்சனங்களை வைத்து வந்தனர். அவற்றையெல்லாம் அர்ச்சனாவின் மகள் சாராவே எதிர்கொண்டு பதிலளித்தார். மேலும் அண்மையில் பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போதுகூட இதுகுறித்து அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் கீழ் நெட்டிசன் ஒருவர், இது ரொம்பவும் ஓவர் ஆக்டிங், ஓவர் முதிர்ச்சி. உன் அம்மா ஆங்கர் என்பதால் இது உன் மரபில் இருக்கிறது. ஆனால், இதனை பாராட்ட முடியவில்லை.  திறமையாக ஏராளமான குழந்தைகள் அதனை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் வெளியே இருக்கிறார்கள். யோசிங்க பேபி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சாரா நீங்கள் அப்படி நினைத்தால், நான் ஒன்றும் பண்ண முடியாது என்று கூலாக பதிலளித்துள்ளார்.