சினிமா

இளம் வயதில் பிரபல நடிகை காலமானார்.! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

Summary:

பிரபல நடிகையும், மாடல் அழகியும், பாடகியுமான சாரா ஹார்டிங் காலமானார். 39 வயது நிரம்பிய இவர்

பிரபல நடிகையும், மாடல் அழகியும், பாடகியுமான சாரா ஹார்டிங் காலமானார். 39 வயது நிரம்பிய இவர் கேர்ள்ஸ் அலவுட் ஆல்பத்திற்காக உலக இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் ஆவார். உலக புகழ் பெற்ற சாரா இளம் வயதிலேயே மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார். 

கடந்த ஆகஸ்ட் 2020ம் ஆண்டு, தனது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்த கேன்சர் நோயைக் கண்டறிந்ததை பாடகி சாரா வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பாடகி சாரா ஹார்டிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக, அவரது தாயார் மேரி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பாடகி சாராவின் மறைவு குறித்து அவரது தாயார் இன்ஸ்டாகிராமில், "இன்று என் அழகான மகள் சாரா காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த இதய துடிப்புடன் பகிர்கிறேன்.  உங்களில் பலருக்கு புற்றுநோயுடன் சாராவின் போரைப் பற்றி தெரியும், அவள் நோயறிதலில் இருந்து கடைசி நாள் வரை மிகவும் வலுவாக போராடினாள். இன்று காலை அவள் அமைதியாக மரணத்தை தழுவினாள்.

இந்த கொடூரமான நோய்க்கு எதிரான போராட்டத்தில் அவள் நினைவில் இருக்க விரும்ப மாட்டாள் என்று எனக்குத் தெரியும். அவள் ஒரு பிரகாசமான, பிரகாசிக்கும் நட்சத்திரம், அதற்கு பதிலாக அவள் எப்படி நினைவில் கொள்ள முடியும் என்று நம்புகிறேன், என்று பகிர்ந்துள்ளார். பலரும் பாடகி சாராவின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement