ஆள விடுங்க.. தொகுப்பாளினியின் பேச்சால் மேடையிலிருந்து இறங்கிய ஏ.ஆர் ரஹ்மான்! ஏன் தெரியுமா? வைரல் வீடியோ!!ar-rahman-tease-anger-who-talk-in-hindi

ஹிந்தியில் பேசிய தொகுப்பாளரை கிண்டல் செய்யும் வகையில் ஏ.ஆர் ரகுமான் மேடையை விட்டு கீழே இறங்கிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி, இசையமைத்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். அவர் தற்போது 99 சாங்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 16 அன்று வெளியாகவுள்ள 99 சாங்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அப்பொழுது மேடையில் படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது தொகுப்பாளினி ஹீரோவிடம் ஹிந்தியில் பேச முயன்றபோது, உடனே ரகுமான் ஹிந்தி என கூறி விட்டு சிரித்துக் கொண்டே மேடையிலிருந்து இறங்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மானின் இந்த கிண்டலை கண்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.