நடிகராகிறாரா நம்ம ஏ.ஆர் ரஹ்மான்?? தீயாய் பரவிய தகவல்!. உண்மையை உடைத்து ஷாக் கொடுத்த இசைப்புயல்!!

Summary:

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டான நிலையில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும், ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து உச்சம் தொட்டு தற்போது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். மேலும் இவர் ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும் ஏ.ஆர் ரகுமான் தற்போது 99 சாங்க்ஸ்  என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் அடுத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த ஏ.ஆர் ரகுமான்  கூறுகையில், இயக்குனராக மாற இப்போது எனக்கு நேரம் இல்லை. அதற்கு பல காலம் ஆகலாம். ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிதாக உள்ளது. 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது குறித்து முடிவெடுப்பேன். 

மேலும் உங்களை நடிகராக காண முடியுமா என்ற கேள்விக்கு, நான் என் சொந்த உலகில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன். அதனால் அமைதியாக இசை, கதை எழுதவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Advertisement