எளிமையாக நடந்து முடிந்த ஏ.ஆர்.ரகுமானின் மகள் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.!

எளிமையாக நடந்து முடிந்த ஏ.ஆர்.ரகுமானின் மகள் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.!



ar-rahman-daughter-marriage-photo-viral

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

இந்த தம்பதியினருக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான கதீஜா ரகுமானுக்கு கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சவுண்ட் இன்ஜினீயர் ரியாசுதீன் சேக் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

AR Rahman

அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர். ரகுமான், அதில் மணமக்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.