சினிமா

தனது ஆடையை விமர்சனம் செய்தவருக்கு, மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான் மகள்.!

Summary:

ar rahman daughter answered for hurting her father

 சமீபத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் வெளியாகி 10வது ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில்,அதற்கான கொண்டாட்ட விழா மும்பை தாராவி பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டார். 

மேலும் அப்போது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா, மேடையில் தனது தந்தையுடன் கலந்துரையாடினார்.அப்பொழுது கதீஜா பர்தா அணிந்து வந்துள்ளார். அதனை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தனர். மேலும் சிலர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய வைத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

ar rahman with daughter க்கான பட முடிவு
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து கதீஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 

நான் எனது தந்தையுடன் மேடையில் உரையாடினேன். அதற்கு நான் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் சிலர், நான் எனது தந்தையின் கட்டாயத்தாலே பர்தா அணிந்து வந்ததாக கூறி விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 நான் அணியும் உடைகளுக்கும், தன்னுடைய பெற்றோர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை . நான் என்னுடைய விருப்பப்படியே பர்தா ஆடையை அணிந்திருக்கிறேன் .

மேலும் என் வாழ்க்கையில் எது வேண்டும் என்பதை தீர்மானம் செய்யும் அளவுக்கு தான் பக்குவமடைந்து விட்டேன் , எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எந்த உடையை அணிய வேண்டும், எப்படி வாழவேண்டும் என்ற சுதந்திரம் இருப்பதாகவும், அந்த சுதந்திரத்தைதான் தானும் அனுபவித்து வருகிறேன் .எனவே ஒருவரை பற்றிய உண்மை நிலவரம் தெரியாமல், யாரையும் எடை  போடாதீர்கள் என கஜீதா தெரிவித்துள்ளார்.