இதைத்தானே எதிர்பார்த்தோம்.. ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட மாஸான அறிவிப்பு! செம குஷியில் ரசிகர்கள்!!

இதைத்தானே எதிர்பார்த்தோம்.. ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட மாஸான அறிவிப்பு! செம குஷியில் ரசிகர்கள்!!


ar rahman announced about 99 songs movie ott release

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் ஏராளமான பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்து புகழின் உச்சத்தை அடைந்து  தற்போது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரகுமான். மேலும் இவர் ஆஸ்கார் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் முதன்முதலாக கதை எழுதி, தயாரித்து இசையமைத்த திரைப்படம் 99 சாங்ஸ். இத்திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ஆனால் படம் வெளியான சில நாட்களிலேயே கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏ.ஆர் ரகுமான் நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 99 சாங்ஸ் திரைப்படம் மே 21 நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது