தனது மகனுடன் நடிப்பில் களமிறங்கிய ஏ. ஆர். ரஹ்மான்!

தனது மகனுடன் நடிப்பில் களமிறங்கிய ஏ. ஆர். ரஹ்மான்!


ar-rahman-and-his-son-arr-ameen-to-act-in-promo-video-f

தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருஷ்ணா. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் பத்து தல. இந்தத் திரைப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

AR Rahman

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தத் திரைப்படத்திற்கு இசை புயல் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான்  இசையமைத்திருக்கிறார். இத்தனை படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

AR Rahman

இத்திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாவது முன்னிட்டு மார்ச் இரண்டாவது வாரத்தில் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக பாடல் ஒன்று தயாராகி இருக்கிறது. அந்தப் பாடலின் வீடியோவில் ஏ. ஆர். ரஹ்மானின் மகன் ஏ. ஆர். ஆர். அமீன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இணைந்து  நடிக்கின்றனர். இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.