2008 ஆம் ஆண்டு நான் ஒருவரை காதலித்தேன்..! முதல்முறையாக மனம் திறந்த நடிகை அனுஷ்கா.!

2008 ஆம் ஆண்டு நான் ஒருவரை காதலித்தேன்..! முதல்முறையாக மனம் திறந்த நடிகை அனுஷ்கா.!


Anushka talks about her love and marriage rumors

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அனுஸ்கா. ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் அனுஸ்கா. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது.

பாகுபலி படத்தில் நடித்தபோது, படத்தின் நாயகன் பிரபாஸுடன் அனுஸ்கா காதலில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் கிரிக்கெட் வீரர் ஒருவரை அனுஷ்க்கா காதலிப்பதாக பேசப்பட்டது, சமீபத்தில், இஞ்சி இடுப்பழகி பட இயக்குநர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டது.

anushka

இப்படி நாளுக்கு நாள் ஒரு தகவல் வெளியாகிவரும் நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் அனுஸ்கா. எனது திருமணம் ஏன் எல்லோருக்கும் பெரிய விஷயமாக உள்ளது எனத் தெரியவில்லை. நான் 2008 ஆம் ஆண்டு ஒருவரை காதலித்தேன், ஆனால் நாங்கள் இருவரும் தற்போது காதலர்களாக இல்லை. ஒருவேளை இருவரும் தற்போதுவரை காதலித்திருந்தால் நிச்சயம் அவர் யார் என்று கூறியிருப்பேன், ஆனால் நாங்கள் தற்போது பிரிந்துவிட்டோம் என கூறியுள்ளார்.

மேலும், நடிகர் பிரபாஸை தனக்கு 25 வருடங்களாக தெரியும் என்றும், அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பரே தவிர, நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. காதல் உறவை யாராலும் மறைக்க முடியாது. நிச்சயம் எனது திருமண தகவல் குறித்து கூறுவேன் என அனுஸ்கா கூறியுள்ளார்.