"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
வாவ்.. சூப்பர்! சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா ரோலில் நடிக்கவிருப்பது இவரா! தீயாய் பரவும் தகவல்!!
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினித் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தனர். இப்படத்தை டைரக்டர் பி.வாசு இயக்கியிருந்தார்.
இவ்வாறு மாபெரும் ஹிட் கொடுத்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் பி.வாசு ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தில் முக்கிய முன்னணி ரோலில் லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அத்தகைய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாகவும், அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.