சினிமா

பாலியல் தொல்லைகள் பற்றி பிரேமம் நடிகை அனுபமா பேச்சு..! அதிர்ச்சி தகவல்...!

Summary:

anupama-speaks-about-cinema

தற்போது நிறைய இடங்களில் பாலியல் தொல்லை தலை விரித்து ஆடுகிறது. குறிப்பாக சினிமா திரையிலும் பாலியல் தொல்லை இருக்க தான் செய்கிறது. 
இந்நிலையில் சினிமாவில் பாலியல் தொல்லை அதிகமாக இருக்கிறது என அண்மையில் ஒருசில நடிகைகள் வெட்ட வெளிச்சம் ஆக்கி வருகின்றனர். அதிலும் முக்கியமாக நடிகை ஸ்ரீரெட்டி தான். அவர் சில நாட்களும் முன்பு தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குகின்றனர் என்று ஒரு பட்டியலே வைத்திருந்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 

இந்நிலையில் தற்போது மெகா ஹிட் அடித்த படமான பிரேமம் படத்தி மூலம் வெளியே தெரிந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் தற்போது பாலியல் தொல்லைகள் பற்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சினிமாவில் நீண்ட காலமாக பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், தனக்கு இதுவரை பாலியல் தொல்லை இருந்தது இல்லை எனவும் கூறியுள்ளார். குறிப்பாக புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு இதுபோன்ற  தொந்தரவுகள்  அதிகமாக தரப்படுகின்றன எனவும் கூறியுள்ளார். இந்த தொல்லைகளை தடுப்பதற்கு எனக்கு தெரிந்த வழி இது தான் என்றும் அதனால் நான் இதனை வெளிப்படையாக சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார். 

மேலும் நடிகைகளும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கிளாமர் காட்டி மட்டும் வாழ்க்கையில் ஜெயித்துவிட முடியாது நடிப்பு திறமை இருந்தால் மட்டுமே போதும். அப்போதுதான் சினிமாவில் நல்ல நிலைமைக்கு வர முடியும் எனவும் கூறியுள்ளார். 


Advertisement