பிக் பாஸ் கவின் திரைப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத்... புதிய அப்டேட் வெளியிட்ட பட குழு.!

பிக் பாஸ் கவின் திரைப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத்... புதிய அப்டேட் வெளியிட்ட பட குழு.!


aniruth-team-up-with-kavin-for-his-next-project

சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கவின். இவர் லிஃப்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்திற்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இவரது நடிப்பில் உருவான டாடா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது  நடன இயக்குனரான சதீஷ் கிருஷ்ணன்  இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

kavin

இந்த செய்தியை கவின் தனது ட்விட்டர் சமூக வலைதளம் மூலமாக அவரே தெரிவித்திருக்கிறார். அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கும் இவர் அனிருத் எனது திரைப்படத்தில் ஒரு பாடல் ஆவது பாட மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் எனது திரைப்படத்திற்கே அவர் இசையமைக்கிறார் என்ற இன்ப அதிர்ச்சி எனக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி  என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

kavinப்ரீத்தி அஸ்ராணி என்பவர் கதாநாயகியாக நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை  வீட்ல விசேஷங்க திரைப்படத்தை தயாரித்த  ராகுல் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கான பூஜையும் முடிந்து விட்டது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.