இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவை பார்த்திருக்கீங்களா! அட.. அவர் ரஜினியோட இந்த சூப்பர்ஹிட் படத்தில் கூட நடிச்சிருக்கார்!!

இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவை பார்த்திருக்கீங்களா! அட.. அவர் ரஜினியோட இந்த சூப்பர்ஹிட் படத்தில் கூட நடிச்சிருக்கார்!!


Anirudh with father photo viral

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் இவரது இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. மேலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தது.

பின்னர் அனிருத் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். தனது அசத்தலான இசையால் இளைஞர்களை கவர்ந்த அனிருத் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரது கைவசம் தற்போது இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட்  என பல படங்கள் உள்ளன.

anirudh

அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்திரா. இவர், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவியான லதாவின் சகோதரராவார். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்திலும் நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களிலும் ரவி ராகவேந்திரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.