சினிமா

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் அனிருத்! வெளியான தகவலால் செம ஹேப்பியான ரசிகர்கள்!

Summary:

தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் அவரது இசையில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகம் முழுவதும் பெருமளவில் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களுக்கு  இசையமைத்துள்ளார்.

மேலும் நடிகர் தனுஷின் ஃபேவரைட் இசையமைப்பாளரான அனிருத் தொடர்ந்து அவரது அனைத்து படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அனிருத் இறுதியாக  தனுஷின் தங்கமகன் படத்திற்காக இசையமைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் அனிருத்திற்கு  இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் இணைந்து ஒன்றாக பணிபுரியவில்லை.

 இந்நிலையில் ரசிகர்கள் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி மீண்டும் எப்பொழுது இணையும் என கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர் அதாவது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement