கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
6 நாளில் அபார வசூல் சாதனை படைத்த அனிமல் திரைப்படம்: கலெக்சன் விபரம் இதோ.!

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி டோல், திருப்தி திம்ரி, அனில் கபூர் உட்பட பலரின் நடிப்பில் உருவாகி, கடந்த 1 டிசம்பர் 2023 அன்று வெளியான திரைப்படம் அனிமல்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், அமித் ராய் ஒளிப்பதிவில், ப்ரீதமின் இசையில் உருவாகிய திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ.100 கோடி செலவில் தயாரான திரைப்படம், தற்போது வரை இந்திய அளவில் மட்டும் ரூ.314.50 கோடி வசூல் செய்துள்ளது. சர்வதேச அளவிலான வசூலை சேர்த்து ரூ.527 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இதன் வாயிலாக அனிமல் திரைப்படம் ரூ.500 கோடியை கடந்த இந்திய படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.