சினிமா

அட.. நம்ம விஜய் டிவி பிரியங்காவின் கணவர் இவர்தானா? இணையத்தை கலக்கும் செம கியூட் செல்ஃபி புகைப்படம் இதோ!!

Summary:

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி ப்ரியங்கா தனது கணவருடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியில் தவிர்க்கமுடியாத தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

கலகலப்பாக அனைவரையும் கிண்டல் செய்து, மேலும் தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் ஜாலியாக இருக்கும் பிரியங்காவிற்கு எனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் தொகுத்து வழங்கும் அழகை பார்ப்பதற்காகவே ஏராளமான நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். 

இத்தகைய திறமை வாய்ந்த தொகுப்பாளினி பிரியங்கா சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர். மேலும் அதோடு தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். பிரியங்கா கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது கணவருடன் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement