சினிமா

அங்காடித்தெரு பட நடிகர் மகேஷின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வருத்தத்துடன் அவரே கூறிய தகவல்!

Summary:

Angadi theru movie actor magesh current status

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடி தெரு. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அங்காடி தெரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பயங்கர பிஸியானதோடு முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார் அஞ்சலி.

ஆனால், படத்தின் நாயகன் மகேஷ் என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், சமீபத்தி பேட்டி ஓன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் மகேஷ். அவர் கூறுகையில், அங்காடி தெரு படத்திற்கு பிறகு னிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும், எப்படி கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்லித்தர யாரும் இல்லை.

தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன், அதர்வா நடிச்ச ஈட்டி படத்தில் நடிக்க டைரக்டர் என்னை தான் முதலில் கேட்டார். சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டுட்டேன்.

இதுபோன்று நல்ல வெற்றிபெற்ற பலப்படங்களை நான் மிஸ் செய்துவிட்டேன் என்றும், நான் தேர்வு செய்து நடித்த எந்த படமும் சரியாக வெற்றிபெரியவில்லை என்றும் மகேஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Advertisement