விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
ஊ சொல்றியா மாமா.. அசத்தலான லுக்கில் சஅம்சமாக சுண்டியிழுத்த ஆண்ட்ரியா.! சொக்கவைக்கும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் கா மற்றும் பிசாசு 2 என்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் பாடகியாக பல ஹிட் பாடல்களையும் பாடி வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்கள் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா, தான் பாடிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுடன் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆண்ட்ரியா கொள்ளை அழகில் இருக்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.