ஆந்திராவின் அடுத்த முதல்வரே; பிரபல நடிகரின் பெயரில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் என்.டி ராமோ ராவ். இவர் திரையுலக வாழ்க்கைக்கு பின்னர் தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கி மக்களுக்காக பணியாற்றினார்.
தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொறுப்பில் சந்திரபாபு நாயுடு இருந்து வருகிறார். ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியை தக்கவைக்க அவர் போராடி வருகிறார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஜூனியர் என்.டி.ஆர் புகழை மென்மேலும் உயர்த்தியது.
இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் நகரில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-ன் ரசிகர்கள், அடுத்த முதல்வர் ஜூனியர் என்.டி. ஆர் என தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கின்றனர். இவை வைரலாகி வருகிறது.