சின்ன சின்ன வண்ணக்குயில்... ரேவதியாக மாறிய அன்பே வா சீரியல் நடிகை! வாவ்.. எம்புட்டு கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா!!

சின்ன சின்ன வண்ணக்குயில்... ரேவதியாக மாறிய அன்பே வா சீரியல் நடிகை! வாவ்.. எம்புட்டு கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா!!


anbe-vaa-serial-actress-telna-dovis-reels-video-viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் அன்பே வா தொடரில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி அவர் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

நடிகை டெல்னா டேவிஸ் இதற்கு முன் வித்தார்த் நடிப்பில் வெளிவந்த  குரங்கு பொம்மை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் அவர் ஆக்கம், 49 ஓ என்ற படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை டெல்னா டேவிஸ் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். இந்நிலையில் அவர் தற்போது மௌன ராகம் படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன வண்ணகுயில் பாடலுக்கு ரீல் செய்து வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.