அட பாவமே!! 21 வயதாகும் ராட்சசன் பட அம்மு அபிராமிக்கு இப்படி ஒரு சோதனையா!! வேதனையில் ரசிகர்கள்..ammu-abirami-test-corona-possitive

ராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பைரவா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்மு அபிராமி பின்னர் ராட்சசன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமான இவர், தற்போது சினிமா, வெப் சீரிஸ் என பயங்கர பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் அம்மு அபிராமிக்கு சமீபத்தில் காய்ச்சல் வந்ததாக கூறப்படும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

Ammu Abirami

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், முன்பைவிட வலிமையாக திரும்பி வருவேன், பாதுகாப்பாக இருங்கள், அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

தற்போது 21 வயதாகும் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.