22 வயசுதானே ஆகுது.! இப்போ அதெல்லாம் எப்படி.! ரசிகரின் அந்த கேள்விக்கு அம்மு அபிராமி நச் பதில்!!

22 வயசுதானே ஆகுது.! இப்போ அதெல்லாம் எப்படி.! ரசிகரின் அந்த கேள்விக்கு அம்மு அபிராமி நச் பதில்!!


ammu-abirami-talk-about-marriage

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் அம்மு அபிராமி. அவர் தானா சேர்ந்த கூட்டம் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பின் அவர் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து நல்ல விமர்சனத்தை பெற்றார். மேலும் அவர் அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த யானை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மு அபிராமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

Ammu Abirami

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என கேள்வி எழுப்பிய நிலையில் அம்மு அபிராமி, எனக்கு 22 வயதுதான் ஆகிறது.  திருமணத்தை விட எனக்கு வாழ்க்கையில் பல கடமைகள் உள்ளது. தான் தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன். எப்போது திருமணம் செய்து கொள்ள சரியான நேரம் என்று தோன்றுகிறதோ அப்பொழுது திருமணம் செய்து கொள்வேன் என பதில் கூறியுள்ளார்.