அசுரன் பட நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்! உங்களையும் விட்டுவைக்கலையா.. செம ஷாக்கான ரசிகர்கள்!!ammu-abirami-affected-by-corono

நாடு முழுவதும் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.  நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மேலும் இத்தகைய கொரோனா தொற்றுக்கு ஏராளமான திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இளம்நடிகை ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதை தொடர்ந்து இவர் தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் அவர் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உடனே மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டேன். மிகவும் வலிமையாக கொரோனாவிலிருந்து மீண்டு வருவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.