சினிமா

அட! இவரைத்தான் அமலாபால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா? புகைப்படம் உள்ளே!

Summary:

Amalapaul second marriage photos leaked

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். பலவிதமான கருத்துக்களை பெற்றது சிந்து சமவெளி திரைப்படம். அதை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்தார் அமலாபால். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் அமலாபால். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் AL விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் 2014 ஆம் ஆண்டு  திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  திருமணம் ஆன மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கினர் அமலா பால். இந்நிலையில் 27 வயதாகும் அமலா பால் இப்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்ற சில செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நடிகை அமலா பால் ‘நானாக முடிவெடுத்த எனது முதல் திருமணம் சரியாக அமையவில்லை.

ஆகையால், எனது இரண்டாவது திருமணம் பற்றி முடிவெடுப்பதை எனது தாய் தந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டேன்.தனது பிள்ளைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு இல்லாத அக்கறையா? ஆகையால், அவர்கள் சொல்லும் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்’என்று தெரிவித்துள்ளார்.

Amalapaul

மேலும், நடிகை அமலா பால் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் நபர் யாரென்றுக்கு தெரியாத நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. எனவே, நடிகை அமலா பால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளபோகும் நபர் இவராக கூட இருக்கலாம் என்று கிசுகிசுக்கபடுகிறது.


Advertisement