மோசமான கோலத்தில், பாத் டப்பில் அமர்ந்தவாறு அமலா பால் வெளியிட்ட புகைப்படம்! கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!

amalapaul photo viral


amalapaul-photo-viral

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்  நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை கிளப்பி அவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு பெயர் வாங்கி கொடுக்காதநிலையில் அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

அதன்பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார் அப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து அவர் அமலாபால் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

amala paul

இந்நிலையில் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அமலா பால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். மேலும் அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றையும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் அவர் தற்போது பூக்கள் நிரப்பப்பட்ட பாத் டப்பில் மேலாடையில்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.