சினிமா

தனது முன்னாள் கணவருக்கு இரண்டாவது திருமணம்!! அமைதி காத்த அமலாபால் தற்போது என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

amalapaul husband got second marriage

தமிழ் சினிமாவில் கிரீடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விஜய்.  இப்படத்தை தொடர்ந்து அவர் பொய் சொல்ல போறோம், மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தேவி உள்ளிட்ட பல வெற்றி திரைபடங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையை 'தலைவி என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகி வருகிறார்.

இயக்குனர் விஜய், அமலாபாலை கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். 

தொடர்புடைய படம்

மேலும் அதனைதொடர்ந்து அமலாபால் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்த ஆடை படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  இயக்குனர் விஜய் தற்பொழுது சென்னை மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் ராஜன் பாபு மற்றும் அனிதா ஆகியோரின் மகளாகிய ஐஸ்வர்யா என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து எந்த கருத்தும் கூறாமல் இருந்த அமலாபால் தற்போது ஊடகம் ஒன்றிற்கு இதுகுறித்து பேட்டியளித்துள்ளார் .அப்பொழுது  அமலாபால் தனது முன்னாள் கணவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் விஜய் மிகவும் இனிமையான மனிதர். அற்புதமான மனிதர். அவர் மிக மகிழ்ச்சியாக வாழவேண்டும்,  அந்த தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement