சினிமா

நடிகை அமலாபாலின் தந்தை திடீர் மரணம்! அவருக்கு இப்படியொரு நோயா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

amalabal father affected by cancer

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அவரது முதல் படமே சர்ச்சையை கிளப்பி அவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து அவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து ஒரு வருடத்திலேயே கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார்.

அப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அனைத்தையும் தாண்டி வந்த அமலாபால் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அமலாபாலின் தந்தை திரு.பால் வர்கீஸ் திடீரென மரணமடைந்தார். இதனால் அமலாபால் பெருமளவில் நொறுங்கிபோனார்.

இந்நிலையில் அமலாபால் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில், எனது அப்பாவிற்கு 4ஆம் நிலை புற்றுநோய் உள்ளது.அவர் எங்களை விட்டு செல்லப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியும். எனக்கு இரவு நேரத்தில், அதிகாலையில் என் அம்மாவிடமிருந்து போன் வந்தால் என் தந்தை இறப்பாக இருக்குமோ என்ற பயம் வரும். அவர் போகும் போதும்  எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்துவிட்டுதான் செல்கிறார் என வேதனையுடன் கூறியுள்ளார்.


Advertisement