மறுபடியுமா? ஆடை படத்தை தொடர்ந்து துணிச்சலோடு அமலாபால் எடுத்த முடிவு.! ஷாக்கான ரசிகர்கள்!!

மறுபடியுமா? ஆடை படத்தை தொடர்ந்து துணிச்சலோடு அமலாபால் எடுத்த முடிவு.! ஷாக்கான ரசிகர்கள்!!


amala-paulnagain-act-in-controversy-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அமலாபால், சமீபத்தில் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் அவர் ஆடையின்றி நிர்வாணமாக நடித்து இருந்தார். அதனால் பெரும் சர்ச்சைகள் எழுந்து, அவருக்கு எதிராக பலரும் மோசமான விமர்சனங்களை எழுப்பி வந்தனர். 

 இந்நிலையில் தற்போது மீண்டும் அமலா பால் பெண்களுடன் பாலுணர்வு தொடர்பான கதை கொண்ட புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

amala paulகடந்த ஆண்டு நெட்பிலிக்ஸ் இணையத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் பெண்களின் பாலுணர்வு குறித்த வெப்சீரிஸ் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஹிந்தியில் வெளியான இந்த வெப் சீரிஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இப்படத்தை நான்கு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.