அந்த வயசுலேயே அப்படியா... பொது இடத்தில் காதலனுக்கு முத்தம் கொடுத்த அமலா பால்... யார் அந்த நபர் தெரியுமா.?

அந்த வயசுலேயே அப்படியா... பொது இடத்தில் காதலனுக்கு முத்தம் கொடுத்த அமலா பால்... யார் அந்த நபர் தெரியுமா.?


Amala paul teenage love story viral

தமிழில் மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகை அமலா பால் தற்போது காடவர் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை அமலாபால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சிக்கு விருந்தினராக சென்றுள்ளார்.

Teenage love story

அப்போது அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் அமலாபால் தனது டீனேஜ் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். டீனேஜில் தனது காதலனுடன் ஒருமுறை தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அப்போது கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் பொழுது தனது காதலனுக்கு முத்தம் கொடுத்ததாகவும் அமலா பால் கூறியுள்ளார். ஆனால் அந்த காதலன் யார், அவர் பெயர் என்ன என்பது குறித்து அமலா பால் எதுவும் கூறவில்லை.