முதல் கணவனுடன் விவாகரத்து.! ஹீரோவுடன் காதல் சர்ச்சை.! பிரபல பாடகருடன் இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா.?



amala-paul-second-marriage-updates

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது முன்னணி நாடிகளில் ஒருவராக உள்ளார்.

சினிமாவில் கலக்கி வந்த இவர் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடத்திற்குள் இவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது விவாகரத்து ஆனது. இதனை அடுத்து விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், விவகாரத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் கலக்கிவரும் இவர் ஆடை படம் மூலம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதுமட்டும் இல்லாமல், கணவனை பிரிந்த இவர், பிரபல நடிகை விஷ்ணு விஷாலுடன் காதலில் இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

Aamala paul

தற்போது மும்பையை சேர்ந்த பிரபல பாடகர் பவணீந்தர் சிங் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அவர் தான் அமலா பாலின் காதலர் எனவும்  கூறப்பட்டது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாவில் அமாலாபாலுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்துடன் ‘Wedding Throwback’ என்று குறிப்பிட்டும் இருந்தார்.

ஆனால் அந்த புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

அவர்கள் இருவரும் ஏற்கனவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், திருமணமும் ரகசியமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.