அவரே ஒரு இசைதான்.. அசந்துபோய் புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்! அட.. யாரைனு பார்த்தீங்களா!!allu-arjun-wish-singer-sid-sriram

தெலுங்கு திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற புஷ்பா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார்.

மேலும் இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அஜய், பகத் பாசில், தனஞ்செயா, சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் நடிகை சமந்தா இந்தப் படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடலில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே செம ட்ரெண்டானது. இதில் ஸ்ரீ வள்ளி என்ற பாடலை பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

Sid sriram

அவரை பாராட்டி அல்லு அர்ஜுன் தன் ட்விட்டர் பக்கத்தில், சகோதரர் சித் ஸ்ரீராம் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீவள்ளி பாடலை பாடினார். அப்போது எந்த பின்னணி இசையுமின்றி அவர் அந்த பாடலை பாடினார். அதனை கேட்டதும் அவரது குரலில் மயங்கினேன். இவர் குரலில் ஏதோ வசியம் உள்ளது. மேலும் இவருக்கு பின்னணி இசையெதுவும் தேவையில்லை. அவரே இசைதான் என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.