சினிமா

வாவ்..செம கியூட்ல!!கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன்! குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு 6 வயதில் யாழினி என்

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து வருகிறது. இத்தகைய கொடி வைரசால் சமானிய மக்கள் துவங்கி திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து ஏராளமான உயிரிழக்கும் அவலமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்ட அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளை முத்தமிட்டு கொஞ்சி தீர்த்துள்ளார். மேலும் இந்த நெகிழ்ச்சி வீடியோவை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி பலரும் அதை ரசித்து பார்த்து வருகின்றனர்.


Advertisement