சினிமா

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராஜா ராணி செம்பா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Summary:

Aliya maanasa new haircut goes viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஓன்று ராஜா ராணி. இதில் ஹீரோவாக குளிர் 100 டிகிரி பட நடிகர் சஞ்சீவ் கார்த்திக் என்ற வேடத்திலும், நாயகியாக ஆலியா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஏக பட்ட வரவேற்பு உண்டு.

ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம். அதற்கு முக்கிய காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான். இதற்கு முன்னர் மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். இதையடுத்து ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திகை ஆல்யா மானசா காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மானசா தனது முடியை ஷார்ட்டாக வெட்டிக்கொண்டு புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். ஏற்கனவே இவரை பலரும் சைனாகாரி போல் உள்ளீர்கள் என்று கிண்டல் செய்துவரும் நிலையில், தற்போது இவரது புதிய ஹேர் ஸ்டைலும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.


Advertisement