முகவரி முதல் விஸ்வாசம் வரை... தல அஜித் பற்றி பிரபலம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு.! குவியும் லைக்குகள்..

முகவரி முதல் விஸ்வாசம் வரை... தல அஜித் பற்றி பிரபலம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு.! குவியும் லைக்குகள்..


Ajithin mugavari muthal vishvasam varai vairal Twitter

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர். இவருடன் பணியாற்றாத நடிகர், நடிகைகள் குறைவு தான். பிருந்தா மாஸ்டர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

தற்போது நடிகர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கும் 'ஹே சினாமிகா' என்ற படத்தில் பணியாற்றயுள்ளார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தல அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


மேலும் அதில் தல அஜித்துடன் முகவரி முதல் விஸ்வாசம் வரை.. நல்ல மனிதர், கடின உழைப்பாளி, என் குருநாதர் என பதிவிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.