சினிமா

மாஸ்க் அணிந்து, மனைவி ஷாலினியுடன் செம மாஸாக காரில் ஏறிசெல்லும் தல அஜித்! வைரலாகும் வீடியோ!

Summary:

Ajith with shalini latest video viral

சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொரோனா பிரச்சினை முற்றிலுமாக முடிவடைந்த பிறகு படப்பிடிப்புகளை தொடங்கலாம் என தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருக்கும் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மாஸ்க் அணிந்து காரில் ஏறி செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement