வாவ்.. தல ஸ்மைல் வேற லெவல்! பார்ப்போர் மனதை கொள்ளையடிக்கும் அஜித்- ஷாலினியின் கியூட் புகைப்படம்!!ajith-shalini-latest-photo-viral

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் தள்ளி வைக்கப்பட்டது.

அஜித்தின் பிறந்தநாள் கடந்த மே 1 அன்று கொண்டாடப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் , திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அன்று கொரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் மனைவி ஷாலினியுடன் இருப்பது போன்ற செம க்யூட்டான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி செம ட்ரெண்டாகி வருகிறது. இதில் மனைவி ஷாலினியின் பின்புறம் அஜித் சிரித்தப்படி நின்று இருக்கும் இந்த புகைப்படம் பார்ப்போரின் மனதை கவர்ந்துள்ளது.