சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்கும் தல அஜித்! எந்த படத்தில் தெரியுமா!

Summary:

Ajith rajini

தமிழ் சினிமாவில் கொண்டாட கூடிய பிரபலங்களாக விளங்குபவர்கள் தல அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவருமே எந்த வித பின்பலமும் இன்றி சினிமாவில் முன்னேறி வந்தவர்கள்.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அஜித்தின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது தல அஜித் அவர்கள் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாடமாக தான் இருக்கும். 


Advertisement