அஜித்தின் 63வது படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித்தின் 63வது படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



Ajith Kumar in 63 movie title poster

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

AK 63

மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனன் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

AK 63

இந்த நிலையில் அஜித் குமாரின் 63 வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் அஜித்குமாரின் 63வது படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.