நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா தல அஜித்! உற்சாகத்தில் தல ரசிகர்கள்!

Ajith kamal


Ajith kamal

நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ரசிகர்களால் அன்பாக தல என அழைக்கப்படுபவர் அஜித். இவருக்கு பட்டிதேட்டி எங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

ஆனால் தல அஜித் எப்போதும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையுடன் வாழ்பவர். இதனால் இவரை சந்திக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்காமல் போனது. இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.

kamal

அதாவது கமல் பிறந்த நாளாகி இன்று அவர் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெறும் விழாவிற்கு ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் நடிகர் கமலுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் தல அஜித் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.