டெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற தல அஜித்.! இணையத்தையே கலக்கும் அசத்தல் வீடியோ இதோ !!

டெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற தல அஜித்.! இணையத்தையே கலக்கும் அசத்தல் வீடியோ இதோ !!



ajith-gun-shooting-at-delhi-video-viral

தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்கவும்  பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.

நடிகர் அஜித் சினிமா துறையில் மட்டுமின்றி கார் பைக் ரேஸ், அறிவியல்,  விளையாட்டு என மிகவும் வித்தியாசமாக தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் தற்போது துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அஜித் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 200 மதிப்பெண்களை பெற்று ஒன்பதாவது இடத்தையும் பெற்றார்.

Ajith

 இந்நிலையில் டெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த வீடியோவும் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.